பேரவைக்குள் பிளவு! மறுக்கிறார் தலைவர்

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை என்ற பெயரோடு அண்மையில் முன்னாள் போராளிகள் சிலரும் முன்னாள் போராளிகளை உள்ளடக்கிய கட்சிகள் சிலவும் இணைந்து உருவாக்கிய கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இவ் விடயம் தொடர்பாக அக் கட்சியின் துணைத்தலைவர்  செ. அரவிந்தன் கருத்து தெரிவித்த போது,


இன்று விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் கூட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. 


இதன்போது நிர்வாக ரீதியாகவும் பொறுப்புக்கள் தொடர்பிலும் கடும் முரண்பாடான நிலை காணப்பட்டது.

இதனையடுத்து சிலர் குறித்த கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டோம். அத்துடன் இனிவரும் காலங்களில் கட்சியுடனும் தொடர்புகளை பேணமாட்டோம் என தெரிவித்தார். 


இதேவேளை குறித்த கட்சியின் தலைவரான மலரவனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,


இன்று கிளிநொச்சியில் எமது கட்சியின் கூட்டம் இடம்பெற்றது.  இதன்போது காரசாரமான கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றருந்தது. எனினும் எமக்குள் எவ்வித பிளவும் இல்லை. 

எமது கட்சி சுயேற்சைக்குழுவாக யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகின்றது. இதன் முதன்மை வேட்பாளராக நாதன் என்பவரும் எமது கட்சியின் தேர்தல் குழு தலைவராக மகேந்திரனும் செயல்படுவார்கள். அவர்கள் தேர்தல் காலத்தில் ஊடகங்களுக்கு கருத்துக்களையும் தெரிவிப்பார்கள் எனவும்  தெரிவித்திருந்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *