ராகவா லாரன்ஸின் ஆதரவற்றோர் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா

ராகவா லாரன்ஸின் ஆதரவற்றோர் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Raghava LawrenceRaghava Lawrence

தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மிக அதிக அளவில் கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். தற்போது வரை இந்தியா முழுவதும் 1,45,000 நபர்களுக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 145 பேர் மரணமடைந்துள்ளனர் என்கிற செய்தியும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் நடிப்பதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு மக்களுக்கு பல நலன் விஷயங்கள் செய்து வருபவர் ராகவா லாரன்ஸ். தனது டிரஸ்ட் மூலமாக பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர் உதவி வருகிறார். மேலும் பலரது சிகிச்சைக்கும் உதவி செய்து வருகிறார். அதுமட்டுமின்றி கொரோன லாக்டவுனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர் உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் லாரன்ஸ் நடத்திவரும் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்கிற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

சென்னை அசோக் நகரில் இயங்கிவரும் இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள மாணவிகள்,மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் என 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இல்லத்தில் பணியாற்றும் சமையல் செய்யும் பணியாளர் மூலமாக இது பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *