பத்து வயது இந்திய சிறுமியின் நெகிழ்ச்சி செயல்! விருது வழங்கி கெளரவித்த டிரம்ப்!

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொவிட் -19 வைரஸானது அமெரிக்காவில் பெருமளவு உச்சகட்டத்தை தாக்கத்தை வெளிப்படுத்தியது. அமெரிக்காவில் கொவிட் -19 பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 1,550,294 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 91,981 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சமயத்தில், நிதியுதவி அளித்து உதவி செய்யும் நபர்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெளனியா ட்ரம்ப் கௌரவம் செய்து வரும் நிலையில், இந்திய வம்சாவளியை சார்ந்த சரவ்யா அண்ணப்பரெட்டி என்ற பத்து வயது சிறுமியை டிரம்ப் கௌரவப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணம் துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் சரவ்யா அண்ணப்பரெட்டி, தனது சக மாணவிகளுடன் சேர்ந்து உள்ளூர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தீயணைப்பு படையினருக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை இலவசமாக வழங்கியுள்ளார்.

இதுமட்டுமல்லாது சுமார் 200 க்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு தனிப்பட்ட முறைகளில் வாழ்த்து அட்டைகளை அனுப்பியுள்ளார். சிறிய வயதில் சிறுமி மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டும் விதமாக, சிறுமியை வெள்ளை மாளிகைக்கு அதிபர் ட்ரம்ப் வரவழைத்து கௌரவம் செய்துள்ளார். மேலும், சிறுமி சரவ்யா அண்ணப்பரெட்டி ஆந்திர பிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *