திருப்பதி கோவில் சொத்துக்களை ஏலம் விடும் முடிவில் திருப்பம்

திருப்பதி கோவில் சொத்துக்களை ஏலம் விடும் முடிவில் திருப்பம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்களை ஏலம் விடும் தேவஸ்தானத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், தற்காலிகமாக அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

திருப்பதி கோவில் சொத்துக்களை ஏலம் விடும் முடிவில் அதிரடி திருப்பம்

திருப்பதி கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பணம், நகை மட்டும் அல்லாது நிலங்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இப்படி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு நிலங்கள் நன்கொடையாக வந்துள்ளன.

இந்த நிலையில், தமிழக பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தமிழ்நாட்டில் இருக்கும் 23 சொத்துக்கள் உட்பட 50 சொத்துக்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்திருந்தது.
ஏழுமலையான் சொத்துகளை பொது ஏலத்தில் விற்பனை செய்யும் முடிவுக்கு அரசியல் கட்சியினர், பக்தர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை அடுத்து, ஏழுமலையான் கோவில் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்யும் முடிவு தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள், விவாதங்கள், பக்தர்கள் மனநிலை ஆகியவற்றை பற்றி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் விவரித்துக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஆந்திர மாநில பொது நிர்வாகத்துறை நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், 2016-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான 50 சொத்துக்களை பொது ஏலத்தில் விற்பனை செய்ய அப்போதைய அறங்காவலர்கள் முடிவு செய்தது.

இந்த விஷயத்தில் பக்தர்களின் நம்பிக்கை, மனநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சொத்துகளை ஏலம் விடும் முடிவை தேவஸ்தான நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக தேவஸ்தான நிர்வாகமானது மடாதிபதிகள், பக்தர்கள் ஆகியோர் உட்பட பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட இடங்களை கோயில்கள் கட்டுவதற்கு அல்லது இந்து தர்ம பிரச்சார பணிகளுக்கு பயன்படுத்த முடியுமா? என்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.இந்த விஷயத்தில் இறுதி முடிவு வரும் வரை சொத்துகளை பொது ஏலத்தில் விற்பனை செய்யும் முடிவை தேவஸ்தான நிர்வாகம் ஒத்திவைக்க வேண்டும். தேவஸ்தான நிர்வாக அதிகாரி உடனடியாக இதுபற்றி அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *