தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் வரும் 1ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்

தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் வரும் 1ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜூன் 1 முதல் கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி... அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கால் 2 மாதத்திற்கு மேலாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததைக் கருத்தில் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தினையும் மீன்பிடி தடைக்காலமாக கணக்கில் கொண்டு மீன்பிடி தடைகாலத்தை மாற்றியமைக்க கோரி மத்திய மீன்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையேற்று இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் மே 31ம் தேதி வரையிலான 47 நாட்களுக்கும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31ம் தேதி வரையிலான 47 நாட்களுக்கும் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படும் என்ற திருத்திய ஆணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதனால், தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என்றும் மேற்கு கடற்கரை பகுதி மீனவர்கள் ஆகஸ்ட் ஒன்று முதல் மீன்பிடிக்க செல்லலாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *