உலகை உலுக்கும் கொவிட் -19! மிரண்டு போயுள்ள சுகாதாரத்துறை!

கொவிட் -19

உலகம் முழுவதும் கொவிட் -19 வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலக நாடுகளை மிரள வைத்துள்ள கொவிட் -19 கடந்த சில மாதங்களாக பல்வேறு நாடுகளில் அழிவை ஏற்படுத்தி வருகிறது.அமெரிக்காவில் கொவிட் -19 பலி 60 ஆயிரத்தை நெருங்கி விட, கொவிட் -19 வைரசுவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 35 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.

இத்தாலியில், பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்து விட, பலி ஆனோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. ஸ்பெயின் மற்றும் பிரான்சில் கொவிட் -19 பலி, 23 ஆயிரத்தை தாண்டிவிட, இங்கிலாந்தில் 21 ஆயிரத்து 600 பேரை, கொவிட் -19 வைரஸ் தொற்று காவு வாங்கி விட்டது.

பெல்ஜியத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்க, ஜெர்மனியில் 6 ஆயிரம் பேரும், ஈரானில், 5 ஆயிரத்து 800 க்கு மேற்பட்டோரும் கொவிட் -19 வைரசுக்கு இரையாகியுள்ளனர். இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகளில் கொவிட் -19 பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

சீனாவை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் ஒரே ஒரு உயிரிழப்பு மட்டும் நிகழ்ந்துள்ளது. பிரேசில் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் முறையே 5 ஆயிரம் மற்றும் 4 ஆயிரத்தை கடந்து, உயிரிழப்பு உயர்ந்து வருகிறது. துருக்கியில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்க, கனடாவில், 3 ஆயிரம் பேர் பலி ஆகி உள்ளனர். ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, மெக்சிகோ மற்றும் அயர்லாந்து நாடுகளிலும், உயிரிழப்புகள், ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகின்றன.

ஆக மொத்தம் 2 லட்சத்து 17ஆயிரத்து 968 பேரின் உயிரை, கொவிட் -19 பறித்துள்ளது. கொவிட் -19 வைரஸ் தொற்றால், 31 லட்சத்து 38 ஆயிரத்து 97 பேர் பாதிக்கப்பட, 9 லட்சத்து 55 ஆயிரத்து 695 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 21 லட்சம் பேர், கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில், 57 ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *